திருப்பதி: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்ட சொர்கவாசல் தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தால் ஏற்பட்ட   கூட்ட நெரிசலில் சிக்கி  தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள வைணவத் திருத்தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது.  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும் மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படு கின்றனர்.

இதனை காண நாடு முழுவதும் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கூட்டத்தை கட்டப்படுத்தும் வகையில் ஆன்லைன் டோக்கன்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நிலையில்,  இலவச தரிசன கட்டணம்  இன்று அதிகாலை முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த இலவச டோக்கனை பெர   நேற்றே பல ஆயிரக்கணக்கானோர், அந்த பகுதியில் திரண்டனர். இந்த கூட்டம் நேரம் ஆக ஆக அதிகரித்தது. அளவுக்கு அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.  இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வந்திருப்பது பக்தர்கள் என்பதால் தடியடி நடத்தவோ கடுமையாக நடந்து கொள்ளவோ இயலாது என்பதால் சமாளித்து வரிசையில் போலீசார் அனுப்பினர். ஆனால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்த நிலையில் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.

இதில், சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்தனர். சொர்க்கவாசல் தரிசன டோக்கன் வாங்க திரண்ட பக்தர்களில் 6 பேர் நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த   ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ள அவர், தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.