னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கனடாவிலும் கைவரிசை காட்டி வருகிறது. இங்கு வைரஸ் தாக்குதலுக்கு  5,655 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 61 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையில், சமீபத்தில் லண்டனில் சென்றுவிட்டு திரும்பிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபிக்கு கிரிகோரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் உள்பட அவரது குடும்பத்தினர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி குணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே தான் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி என சோஃபி தெரிவித்துள்ளார்.