இங்கிலாந்தில் கொரோனா மரணம் 20000 ஐ தாண்டாத வரை நல்லது : சுகாதார இயக்குநர்

Must read

ண்டன்

இங்கிலாந்தில் எதிர்பார்ப்பை விடக் குறைவாக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகச் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பா கண்டத்தில் அதிக மரணம் நிகழ்ந்துள்ளன.  உலகிலேயே அதிகமாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இங்கிலாந்தில் சுமார் 5700 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்து அரசின் தேசிய சுகாதார இயக்குநர் ஸ்டீபன் போவிஸ், “இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் சுமார் 5700 பேர் மரணம் அடைந்துள்ளதாகக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன.  இது மிகவும் அதிகமான எண்ணிக்கைதான்.  ஆனால் நாட்டில் சுமார் 20000 பேர் மரணம் அடைவார்கள் என எதிர்பார்த்திருந்தோம்.

அவ்வகையில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 20000க்கும் குறைவாக இருப்பது நல்ல அறிகுறியாகும்.  இதற்குக் காரணம் நமது அதிர்ஷ்டம் இல்லை. இது தற்செயலானதும் இல்லை.  இது முழுக்க முழுக்க நமது நடவடிக்கைஅக்ளின் காரணமாக நிகழ்ந்துள்ளது.  நாம் இந்த வைரஸ் பரவுவதை மேலும் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை இன்னும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

1 COMMENT

Comments are closed.

Latest article