இந்தி திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகி வெளியாகாமல் இருக்கும் படங்கள் ‘சூர்யவன்ஷி’ மற்றும் ’83’. இந்த இரண்டு படங்களின் தயாரிப்புகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது ரிலையன்ஸ் நிறுவனம்.
இந்த இரு படங்களுக்குமே இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வரை, இரு படக்குழுக்களும் ஓடிடியில் வெளியாகாது என்றே கூறிவந்தனர் .
இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 22) ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஷிபாசிஸ் சர்கார் தனது ட்விட்டர் பதிவில்:
Just to reiterate we are 100% inclined to release Sooryavanshi & 83 in theatres. However we do not want to push the release dates any further. If uncertainty continues on the opening of cinemas or the pandemic situation worsening , we will explore all options between theatrical, https://t.co/4XhTrn3CGQ
— Shibasish Sarkar (@Shibasishsarkar) August 22, 2020
” ‘சூர்யவன்ஷி’ மற்றும் ’83’ ஆகிய படங்களை 100 சதவீதம் திரையரங்கில் மட்டுமே ரிலீஸ் செய்யவுள்ளோம் , எனினும் ரிலீஸ் தேதியை மேற்கொண்டு தள்ளிவைக்க நாங்கள் விரும்பவில்லை.
திரையரங்குகள் திறப்பு குறித்த நிச்சயமின்மை தொடர்ந்தால், திரையரங்கு வெளியீடு மற்றும் டிஜிட்டலில் வெளியீடு ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் அனைத்து வழிகள் குறித்து நாங்கள் எங்களுடைய இயக்குநர்கள், நடிகர்கள், பங்குதாரர்கள் ஆகியோர்களுடன் ஆலோசிப்போம்.” என பதிவிட்டுள்ளார் .