கெவின் இயக்கும் ‘வேலன்’ என்ற படத்தில் முகேன் ராவ் – மீனாட்சி ஜோடியாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் பிரபுவும், காமெடி நடிகர் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

தந்தைக்கும், மகனுக்குமான பாசத்தை சொல்லும் இந்த படத்தின் ஷுட்டிங் அண்மையில் முடிந்துள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் பாக்கி.

இந்த படத்தில் சூரி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் ரசிகராக வருகிறார்.

படத்தில் அவரது கேரக்டர் பெயர்- கோட்டைசாமி. ஆனால் மம்முட்டி மீது கொண்ட பற்றுதல் காரணமாக தனது பெயரை மம்மோக்கா என மாற்றிக்கொள்கிறார்.

அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரிதிவிராஜ், தாடியும் அடர்த்தியான மீசையுமாக நடித்திருப்பார். அதே தோற்றத்தில், வேலன் படத்தில் சூரி தோன்றுகிறார்.

– பா. பாரதி

[youtube-feed feed=1]