கொல்கத்தா
அதிகாரத்தில் இருந்து பாஜக அரசை வெளியேற்றுவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். பிறகு மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மம்தா பானர்ஜி,
’பாஜக தலைமையிலான மத்திய அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவோம் மத்திய அரசு.மணிப்பூரில் உள்ள பழங்குடியினரைப் புறக்கணிக்கின்றது. எனவே வெள்ளையனே வெளியேறு நாளில், பாஜகவை நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என நாங்கள் உறுதி கூறுகிறோம்.
மணிப்பூரில் பழங்குடியினர் இனக்கலவரத்தால் கடும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். யாருமே அவர்களின் அவல நிலையைக் கேட்கவில்லை.
நாட்டில் எங்கு பட்டியிலின மக்கள் சித்திரவதை செய்யப்பட்டாலும், மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. மத்திய அரசு மேற்கு வங்கத்தைப் புறக்கணிப்பதை எதிர்த்து நாங்கள் போராடுவோம்.”
என்று அவர் கூறினார்.