சென்னை

விரைவில் தவெக வின் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அர்சியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், சமீபத்தில் நடந்த அக்காட்சியின் முதல் மாநில மாநாடு பரபரப்பு ஏற்படுத்தியது.

தமிழக வெற்றிக்கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் குறித்த ஆலோசனையை அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் செய்ததாகவும், விரைவில் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று தகவல்க கூறுகின்றன.

கட்சியின்  மாவட்ட செயலாளர்களாக பெரும்பாலும் விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், ஏற்கனவே அவர்களிடம் இன்டர்வியூ எடுத்து, எந்தெந்த மாவட்டத்திற்கு யார் யார் செயலாளர்கள் என்பது குறித்த முடிவை அக்கட்சி தலைவர் விஜய் எடுத்து விட்டதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.