மும்பை

த்திய ரெயில்வே மும்பையில் இருந்து மூன்று மணி நேரத்தில் சீரடி செல்ல புதிய ரெயில் 18 சேவையை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது

ரெயில் 18 என்பது எஞ்சின் இல்லாத பெட்டிகளைக் கொண்ட விரைவு ரெயில் ஆகும்.  தற்போது இந்த ரெயில் வந்தே பாரத் என்னும் பெயரில் டில்லி மற்றும் வாரணாசி இடையே இயங்கி வருகிறது.   இந்த ரெயில் 752 கிமீ தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கிறது.  ரெயில் 18 உடைய அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும்.

இந்த ரெயில் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள சீரடி உலக அளவில் புகழ்பெற்ற தலமாகும்.  சாய்பாபா வசித்த இந்த இடத்துக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.   சாய்பாபா அனைத்து மதத்துக்கும் பொதுவானவர் என்பதால் அனைத்து மத மற்றும் இன மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

மத்திய ரெயில்வே மும்பையில் இருந்து சீரடி செல்ல ரெயில் 18 சேவையை விரைவில் அறிமுகம் செய்ய  உள்ளது.  தற்போது இந்த தடத்தில் செல்லும் ரெயில் 9 மணி நேரம் பயணம் செய்கிறது.  இந்த ரெயில் 18 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்த பயண நேரம் மூன்று மணியாக குறைய உள்ளது.  இதன் மூலம் மும்பையில் இருந்து சீரடி செல்பவர்கள் தரிசனம் முடித்து அன்றே திரும்பி வர முடியும்.