பெலகாம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறி உள்ளார்.

தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஜி எஸ் டி மற்றும் பொருளாதார சரிவு பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.   ஆனால் இதுவரை கூட்டம் எப்போது நடைபெறும் என்னும் அறிவிப்பு வரவில்லை.  இது வழக்கத்துக்கு விரோதமாக இருப்பதால் எதிர்க்கட்சிகள் இதற்கு தங்கள் வலுவான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.   பல செய்து ஊடகங்களும் குஜராத் தேர்தலினால் தான் இது தள்ளிப் போகிறது என்னும் தொனியில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

கர்நாடகா மாநிலம் பெல்காமில் மத்திய நாடாளுமன்றத் துறை அமைச்சர் அனந்த் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர், “சட்டசபைக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்கும்.  எந்த மரபையும் மீறாமல் கூட்டம் நடத்த வேண்டும் என்பதே பா ஜ க வின் நோக்கம்.  வழக்கமாக நவம்பர் 3ஆம் வாரம் துவங்கி டிசம்பர் இறுதி வரை நடக்கும் இந்த கூட்டத்தை 10 நாட்கள் மட்டுமே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என தெரிவித்தார்.