வில்லன் நடிகர் சோனுசூட்டை, கொரோனா தொற்று, ஹீரோவாக்கியது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தேடித்தேடி உதவினார்.

கொரோனா குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், சோனுசூட்டுக்கு தினமும் உதவி கோரி, அவரது வலைத்தளத்தில் தகவல்கள் குவிகின்றன.

கல்வி, மருத்துவ செலவுக்கு உதவி கேட்டு செய்திகள் வரும்.

அண்மைக்காலமாக வீட்டுவாடகை கொடுக்க பணம் வேண்டும், எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என்ற ரீதியில் கோரிக்கைகள் வந்தன.

சில தினங்களுக்கு முன்னர் ஒரு ரசிகர் “எனக்கு கல்யாணம் செய்து வைக்க உதவ முடியுமா?” என கேட்டிருந்தார்.

அவர் கேட்டது – பணம்.

இது சோனுசூட்டுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் அந்த ரசிகருக்கு குறும்பாக பதில் அனுப்பினார் சோனுசூட்.

“உதவுகிறேன். உங்கள் கல்யாணத்தில் நான் புரோகிராக வந்து மந்திரம் சொல்கிறேன்” என ஜோக் அடித்துள்ளார்.

– பா. பாரதி