டில்லி,

ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா நலமுடன்  இருக்கிறார் என்று டுவிட்டரில் ராகுல் காந்தி பதிவு செய்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று திடீரென டில்லி  மருத்துவமனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி  அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது நலமுடன் உள்ளதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஓய்வு எடுக்க  சிம்லா சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென கடும் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் டில்லிக்கு கொண்டுவரப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டில்லி அழைத்துவந்தோம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சோனியா காந்தி நன்றாக உள்ளார்’  என்று தெரிவித்துள்ளார்.