டெல்லி: உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வன்முறை சம்பவம் ‘திட்டமிட்ட சதி’ என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தகவல் தெரிவித்து உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 3ந்தேதி விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றியதில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறையில், மேலும் 2 விவசாயிகள், பத்திரிகையாளர் என 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, உ.பி. போலீஸார் மத்திய அமைச்சர் மிஸ்ரா மகன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது.
இந்த விசாரணை குழுவின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படியே 5 பேர் கொல்லப்பட்டது மற்றும் பலர் காயமடைய வழிவகுத்தது என்று கூறுகிறது. என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
லக்கிம்பூர் கேரி வன்முறை: உ.பி. மாநில பாஜக அரசை காய்ச்சி எடுத்த உச்சநீதி மன்றம்…