டெல்லி: இந்தியாவின் முதல்பிரதமரான மறைந்த ஜவாஹர்லால் நேரு நினைவு நாளையொட்டி, டெல்லி சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, ஜவஹர்லால் நேருவின் 61வது நினைவு நாளில் அவருக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் தனது எக்ஸ் தளத்தில், “அவரது கொள்கைகள் எப்போதும் நம்மை வழிநடத்தும்” என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த பன்டிட்   ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் (மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில், பல்வேறு நலத்ததிட்ட உதவிகள் வழங்ககப்பட்டு வருகிறது.  நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பண்டிட் நேரு ஆற்றிய முக்கிய பங்கை போற்றி, தேசம் அவரை மரியாதையுடன் நினைவுகூர்கிறது.

நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி   டெல்லி சாந்தி வனத்திலுள்ள நேரு சமாதிக்கு இன்று காலை சென்றடைந்த சோனியா காந்தி அன்னாரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.