தராபாத்

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு ஊடக விவாதங்களில் பங்கேற்பது குறித்து அறிவுரை கூறி உள்ளார்.

வரும் 2024 ல்  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி அதற்கான அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அக்கட்சியில் உச்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகவுள்ள காங்கிரஸ் கட்சியின் காரிய குழுக் கூட்டம் நடந்தது.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான இந்த குழுவில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 39 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழு கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, சச்சின் பைலட், சசி தரூர் எம்.பி. மற்றும் கவுரவ் கோகாய் ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியில் உயரிய முடிவு எடுக்கும் மற்றும் அதனை அமல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்த குழு உள்ளது.

நேற்று காங்கிரஸ் கட்சியின் காரிய குழு ஐதராபாத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, ஒற்றுமைக்கான செய்தியைக் கூட்டத்தில் தெரியப்படுத்தினார்.மேலும்  இந்தியா கூட்டணியுடன் ஒன்றிணைந்து, பா.ஜ.க.வுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் சோனியா காந்தி பேசும்போது, ”கட்சியின் தலைவர்கள் சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காங்கிரசின் நலன்களுக்குத் தீங்கு ஏற்படுத்தக் கூடிய விமர்சனங்களுடன் ஊடகங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முன்பே, காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகளின் பட்டியல் ஒன்றை அக்கட்சி வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.