புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஜெய்ராம் ரமேஷ் எம்.பி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளார். மேலும், அவர் புது டெல்லி திரும்புவதற்கு முன்பாக நோய்வாய்ப்பட்ட அவரது தாயையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியுடன், அவருடன் ராகுல், பிரியங்கா இருவரும் பயணமாக உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel