லக்னோ:
உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபித் மாவட்டம் மதினாஷா பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி துளசிராம் ( வயது70). உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார்.
அவருடன் வந்திருந்து அவரது மகன் மகன் சூரஜ், தந்தையின் சடலத்தை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ்
ஆனால், இப்போதைக்கு ஆம்புலன்ஸ் வசதியில்லை என்று மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
மருத்துவமனை மார்ச்சுவரியிலும் தந்தையின் உடலை வைக்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை.இதனால் வேறு வழியின்றி, சூரஜ் தனது நண்பர்களை வரவழைத்து தந்தையின் சடலத்தை கை வண்டியில் வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த மனைவியின் சடலத்தை தோளில் சுமந்துவந்த கணவர், பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக மனைவியின் உடல் இறக்கிவிடப்பட நடுவழியில் தவித்த கணவர் என்று இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.