சண்டிகர்:
எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய வீரரின் மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள முகாமில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த தேஜ் பகதூர் யாதவ், அங்கு வழங்கப்படும் தரமற்ற உணவு குறித்த வீடியோவை முகநூலில் பதிவிட்டிருந்தார்.
மூன்று மாத தொடர் விசாரணைக்குப் பின், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ஹரியானாவில் உள்ள அவரது இல்லத்தில் ஜன.18-ம் தேதி மகன் ரோஹித் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பூட்டிய அறைக்குள் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது கையில் துப்பாக்கி இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கும்பமேளாவுக்கு சென்றிருந்த ரோஹித்தின் தந்தை தேஜ் பகதூர் யாதவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.