வாஷிங்டன்:

சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் ஆய்வு செய்யும் கருவிகள்  பல பழுதான நிலையில் இருப்பதாக அமெரிக்காவின் பல மாகாணங்கள் குற்றம் சாட்டி உள்ளன.

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வுகான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல் இருக்க, சீனாவின் பல்வேறு நகரங்கள் சீல்வைக்கப்பட்டு அங்குள்ள 6 கோடிக்கும் மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடிய வைரஸ் அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், இந்தியா உள்பட  25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா  வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் குழுவில் உள்ள அமெரிக்க சுகாதார நிபுணர்களை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகளை கண்டறியும் வகையில்,  கொரோனா வைரஸ் பரிசோதனைக் கருவிகளை  ஜனவரி இறுதியில் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention (CDC) என்ற அமைப்பு அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கும் மற்றும்   சுமார் 30 நாடுகளுக்கும் அனுப்பின.

அமெரிக்காவிலும்  பல மாநிலங்கள் கொரோனா  வைரஸ் பரிசோதனைகளை தொடங்கி உள்ளன. இந்த பரிசோதனைக்காக வழங்கப்பட்ட சோதனை கருவிகளில் பல பழுதான நிலையில் இருப்பதால், பரிசோதனை முடிவுகள் தாமதமாவதாகவும், தவறான பரிசோதனை முடிவுகளை தெரிவிப்பதாகவும்  புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சி.டி.சி யின் நோய்த்தடுப்பு மற்றும் சுவாச நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் நான்சி மெஸ்ஸோனியர்,  “சில விஷயங்கள் எப்போதுமே நாம் விரும்பும் அளவுக்கு சீராக நடக்காது” , சோதனைகளை மேற்கொள்ள தேவையான மறுஉருவாக்கிகள் அல்லது என்சைம்கள் தான் இந்த பிரச்சினை  என்று தெரிவித்தவர்,  எத்தனை கருவிகள் குறைபாடுடையவை என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும்,  யு.எஸ். மாநில சுகாதாரத் துறைகளைச்சேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் ஜார்ஜியா போன்ற நகரங்களி உள்ள பரிசோதனைக்கூடங்களில் பாதிக்கு மேற்பட்ட கருவிகள் பழுதாகி இருப்பதால்,  மாற்று கருவிகளுக்காக காத்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அதே வேளையில்,  இல்லினாய்ஸ் போன்ற பிற மாநிலங்கள் உள்ள  கருவிகள் துல்லியமான முடிவுகளைத் தந்தன என்றும் அவைகள்  இப்போதும் தொடர்ந்து  பரிசோதனையைச் செய்து வருகின்றன  என்றும் கூறினார்.

மேலும் சீனாவில் பலி எண்ணிக்கை 1,100ஐ தாண்டியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) குழுவின் ஒரு பகுதியாக சீனாவிற்கு நிபுணர்களை அனுப்ப சி.டி.சி இதுவரை அழைக்கப்பட வில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தற்போதைய நிலையில், 14 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில்  சீனாவின் வுஹானில் இருந்து யு.எஸ். கலிபோர்னியாவின் சான்டியாகோவில் மரைன் தளத்திற்கு வந்த இரண்டாவது நபர் வைரஸ் நோயால் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடிய நோயை  அமெரிக்காவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன், அதை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும்  அவர் கூறினார்.