கால் வெடிப்பு குணமாக சில எளிய வழிகள்…

Must read

ம்மில் பலர் முகத்துக்கு கொடுக்கும் முக்கியதுவம் கை, கால்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நமது ஆரோக்கியமும் அழகும் கை,காலில் இருந்தே தொடங்குகிறது. இதுவே முழுமையான  அழகாகும். நமது கால் அழகாக இருப்பதற்கு முதலில் காலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் உண்டாகும். சிலருக்கு சோப்பில் இருக்கும் கெமிக்கல் ஒவ்வாமையினால் வெடிப்பு ஏற்படும்.

கால் பராமரிப்பு;

ஒரு கை பிடிவேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் வெடிப்பு மறையும்.

நீங்கள் தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கல்லில் கால்களை தேய்த்து சுத்தப்படுத்தவும் இவ்வாறு செய்வதன் மூலமாகவும் கால் வெடிப்பு  குறையும்.

 

கால் வெடிப்பின் மீது எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாக இருக்கும்.

 

இரவு நேரங்களில் வெதுவெதுப்பான வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரை செய்யலாம்.

தினமும் குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கலாம்.. கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதைப் பயன்படுத்தியும் கால் பாதங்களை தேய்த்து வர வெடிப்பு மறையும்.

 

கால்களுக்கு ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தவும். பிறகு கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளித்து வந்தால் குணமாகும்.

முதலில் பாதங்களை அழுக்காகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தாலே பாதி குறைந்து விடும்.வீட்டிற்குள்ளும் காலணிகளை அணிந்து கொண்டு நடக்கவும்.

 

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்தவும். இது கால் வெடிப்பில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை அண்டவிடாது.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாக இருக்க உதவும்.

 

வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் தேய்த்து விட்டு 15 நிமிடம் கழித்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று அழகாக இருக்கும்.

மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வர கால் வெடிப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக இருக்கச் செய்கிறது.

 

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு மறையும்.

 

உருளைக்கிழங்கை நறுக்கி காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம்  பளபளப்பாகும்.

 

குறிப்பு:- கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால், மற்றும் அழுக்கு சேர்வதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

More articles

Latest article