மோகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓட்டல்கள், மக்கள் கூடும் இடங்களில் அதிக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தலைநகர் மோகாதிசு அருகே காரில் இருந்த குண்டு வெடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். காரை ஓட்டி வந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் குண்டுகளை இயக்கி வெடிக்க செய்துள்ளான்.

இந்த தாக்குதலில் முதல்கட்ட தகவல்படி 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாட்டில் தொடர்ந்து அசாதாரண நிலை நிலவுகிறது.