மொகாடிசு:
சோமாலியாவில் அரசு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது.
somaliya
சோமாலியா என்றாலே பசி பஞ்சம் தலைவிரித்தாடும், உடலிலே வலுவின்றி உணவுக்கு பரிதவிக்கும் அந்நாட்டு மக்களின் முகங்கள்தான் நமது நினைவுக்கு வரும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடான சோமாலியாவில் அரசுக்கும், தீவிரவாத படைக்கும் இடையே நாட்டை கைப்பற்ற மோதல் நடைபெற்று வருகிறது.
சோமாலியாவின் பெரும்பாலான இடங்களை அல்சபாப் என்ற தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளனர். அந்நாட்டு அரசையும் கைப்பற்றி சோமாலியாவை தங்களது தலைமையின் கீழ் கொண்டுவர அவ்வப்போது அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சோமாலியாவின் தலைநகர்  மொகாடிசுவுக்கு  வெளியே  30 கிலோ மீட்டர் தொலைவில் லாட்டோ பூரோ என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இந்த முகாம் மீது அதிகாலை 3 மண அளவில் தீவிரவாதிகள்  திடீர்  அதிரடி தாக்குதல் நடத்தினர்.
வெடிகுண்டு  நிரப்பிய  காரை கொண்டு தற்கொலை படையினர் ராணுவ தளம்  மீது முதலில் தாக்குதல்  தொடங்கினர்.   அதைத்தொடர்ந்து சாரை சாரையாக தீவிரவாதிகள் ராணுவ தளத்திற்குள் நுழைந்து தாக்க தொடங்கினர்.

அல்சபாப் தீவிரவாதிகள் கூட்டம்
              அல்சபாப் தீவிரவாதிகள் கூட்டம்

ராணுவமும்  எதிர்தாக்குதல்  நடத்தியது.  பல மணி நேரமாக  நடந்த துப்பாக்கிச்சண்டையில் 10 வீரர்களும், 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக  சோமாலியா அரசு அறிவித்து உள்ளது.
ஆனால் தீவிரவாதிகள், தங்களுடைய தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரேடியோ மூலம் அறிவித்து உள்ளது.