நைஜீரியா:
வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் நேற்று ஒரு பொதுப் பள்ளி மீது நடந்த தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்தது மட்டுமல்லாமல், 27 மாணவர்கள் உட்பட 42 பேர் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.
யுனிஃசெப் நைஜீரியாவின் பிரதிநிதி பிட்டர் ஹாக்கின்ஸ் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்து குழந்தைகள் தங்களது குடும்பத்திற்கு, பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யூனிசெஃப் இந்த வன்முறை செயல்களை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது, பள்ளிகள் மீதான தாக்குதல்கள் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாகும், குழந்தைகள் எல்லா நேரங்களிலும் வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பாக உணர வேண்டும் எனவும் பீட்டர் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க நைஜீரியா போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பீட்டர் ஹாக்கின்ஸ் ஒப்புக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.