திருவண்ணாமலை:
சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை மாலை 04.29 மணி முதல் 5.42 வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நிகழும் நாளன்று கோவில்களில் நடை அடைப்பது வழக்கமாக உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுகிறது. எனவே சூரிய கிரகணத்தின் போது அண்ணாமலையார் கோவில் நடை அடைக்காமல் வழக்கம் போல் திறந்து இருக்கும். பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel