டெல்லி-
இந்தியாவில் முதல்முறையாக ரயில் பாதைகளில் ஒலிமாசை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இவை சூரியமின் சக்தியால் இயக்கப்படும். டெல்லியில் . புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஓக்லாவிஹார் மற்றும், ஜஸோலாவிஹார் இடையில் உள்ள ரயில்பாதையில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கருவிகள் ஒலியை கட்டுப்படுத்துவதோடு சூரியமின் உற்பத்திக்கும் பயன்படுத்தவிருக்கின்றன. இதற்காக டெண்டர்கள் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்ரேசனுக்கு வழங்கப்படும். குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் இந்த ஒலி மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகளை பொருத்துவதால் மக்கள் ஒலித் தொல்லையால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்றும் ஒருவேளை இத்திட்டம் வெற்றிப் பெறவில்லை என்றால் மீளாய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்ட்ரியா, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், மற்றும் இத்தாலியில் இதுபோன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.