கிருஷ்ணராயபுரம் அருகே புதிய மேட்டு வாய்க்கால் நடைபாலம் பகுதியில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர் காவிரி ஆற்றில் இருந்து கட்டளை புதிய மேட்டு வாய்க்கால் செல்கிறது. இதில், மேட்டுமகாதானபுரம் பகுதியில், வாகனம் செல்லும் வகையில், வாய்க்காலில் நடைபாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகே, தார்ச்சாலையில், மண் அரிப்பு ஏற்பட்டு, பெரிய பள்ளமாக மாறி உள்ளது. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி பள்ளத்தில் விழுந்துவிடுகின்றனர்.
தொடர்ந்து மண் அரிப்பு ஏற்படுவதால், சாலையோரத்தில் மண் கொட்டப்பட்டு, அவை சமப்படுத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.