ஐதராபாத்:
வெளிநாட்டு வேலைவாய்ப்பை தவிர்த்து இந்திய ராணுவத்தில் இணைந்த சாப்ட்வேர் என்ஜினியர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிமென்ட் தொழிற்சாலை கூலி வேலை செய்பவர் பர்னானா குணயா. இவரது மகன் பர்னானா யதகிரி. அரசு உதவியுடன் பள்ளி படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர் ஐதராபாத்தில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப கல்லூரியில் (ஐஐஐடி) சாப்ட்வேர் என்ஜினியர் பட்டம் பெற்றார்.
யூனியன் பசிபிக் ரெயில் சாலை என்ற அமெரிக்க நிறுவனம் அவருக்கு வேலைவாய்ப்பு அளித்து பணியாணை அனுப்பியது.
இந்தூ ஐஐஎம்.ல் மேற்படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதி 93.4 தவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
ஆனால், இவற்றையெல்லாம் உதறிய யதகிரி, ராணுவ தனது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ராணுவ பயிற்சி கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் பயிற்சி முடித்து வெள்ளி பதக்கம் வென்றார். தற்போது அவர் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
இது குறித்து யதகிரி கூறுகையில், ‘‘எனது தந்தை சாதாரண நபர். நான் சாதாரண வீரராக ராணுவத்தில் இணைவதாக நினைத்து கொண்டுள்ளார். அதனால், அதிக சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு ராணுவத்தில் சேர்ந்து தவறு செய்ய உள்ளதாக கூறினார்.
கார்பரேட் உலகத்தில் சிக்கி கொண்டு ஏராளமான பணம் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அது எனக்கு திருப்தி தராது. நாட்டிற்காக வேலை செய்வதால் கிடைக்கும் மன நிறைவு, எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது. நாடு பெருமைப்படும் வகையில் எனது பணி இருக்கும்’’ என்றார்.