டெல்லி: தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பீகாரில்  சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி வாக்காளர்கள், வெளிநாட்டு அகதிகள் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை நீக்கும் வகையில்,  வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தம் (SIR – Special Intensive Revision)  மேற்கொள்ளப்பட்டது. . இதன்முலம் போலி வாக்காளர்கள், அகதிகளின் வாக்காளர்கள் உரிமை உள்பட பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் தேர்தல் ஆணையம் தனது நிலையில் இருந்து பின்வாங்காமல் பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் பணியை மேற்கொண்டது. இதற்கு உச்சநீதிமன்றமும் ஆதரவு வழங்கியது.

இதைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம்  நாடு முழுவதும் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் (SIR – Special Intensive Revision) மேற்கொள்ள முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து 2வதுகட்டமாக அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம்  அறிவிக்கப்பட்டு, நவம்பர் 4ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 4ந்தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கிய நிலையில், அதற்கு திமுக உள்படஎதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை மீறி எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,   தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக  இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.  அதாவது,  தமிழகத்தில் 6.24 கோடி வாக்காளர்களுக்கு 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில்  இதுவரை  வாக்காளர்களிடம் பெறப்பட்ட 4.53 கோடி (70.70%) விண்ணப்பங்களை BLO-க்களால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.