பகலில் சமூக சேவகன்..  இரவில் சாராய வியாபாரி..

பகலில் பூனை மாதிரி பதுங்கி இருக்கும் ஹீரோ, இரவில் ’டான்’ வேடம் தரிப்பதை, பல சினிமாக்களில் பார்த்துள்ளோம்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அப்படி ஒரு நபர் நிஜத்தில் நாடகம் நடத்தியதை போலீசார் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அந்த ஆசாமியின் பெயர், மனோஜ் சாகு.அங்குள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள நாகூன் பகுதியைச் சேர்ந்தவன்.

ஏழைகளுக்குக் கேட்காமலேயே உதவி செய்வான்.

உணவு வழங்குவான்.

‘சமூக சேவகன்’ என்ற பெயரைப் பெற்றிருந்த மனோஜுக்கு இன்னொரு முகம் இருந்தது.

இரவில் அவன் தொழில் சாராய விற்பனை.

தனது ஊரில் சாராயம் காய்ச்சி, எல்லையில் உள்ள உத்தரப்பிரதேச மாநில கிராமங்களுக்குச் சாராயம்  கடத்தி விற்பதைப் பிரதான தொழிலாக வைத்திருந்தான்.

ஊரடங்கின் போது தான் அவனது, சாயம் வெளுத்தது.

அந்த கிராமத்தில் போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, சாராய கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில், இந்த கும்பலுக்குத் தலைவனே மனோஜ் தான் என்பது தெரிய வந்தது.

தப்பி ஓடிய மனோஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேச்ன்