கொழும்பு:
இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 8 நாட்களுக்கு பிறகு தற்போது தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்னும் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. காவல்துறையினர், பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களை வேட்டை வருகின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.
இதன் காரணமாக இலங்கையில் வதந்திகள் பரவாமல் தடுக்கும் நோக்கில், அரசாங்கம் சமுக வலைதளங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்திருந்தது. தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துள்ள நிலையில், தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை இலங்கை அதிபர் சிறிசேனா பிறப்பித்துள்ளார்.