தி இந்து நாளிதழ் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அந்த நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர், இப்போது அதே நாளிதழின் தொழிற்சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. தனது தந்தையும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியிடம் கனிமொழி வாழ்த்து பெறும் ஒளிப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. காரணம், கருணாநிதியின் ஒளிப்படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கனிமொழியிடம் நெட்டிசன்கள் இரு அதிரடி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

அவை..

“கனிமொழி அவர்களே’’

தி இந்து நாளிதழ் கேன்டீனில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார்களே.. அதை நீக்க போராடுவீர்களா?

இன்னொரு நாளிதழின் தொழிற்சங்க தலைவராக ஆகியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. உங்களது.. அதாவது உங்கள் (திமுக!) குடும்பத்து நாளிதழான முரசொலியில் தொழிற்சங்கம் அமைய முனைவீர்களா? அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியிலும்?