டில்லி:   

மூக நீதியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்காக நாம் எனும் பொருளில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கும் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மாநாடு டில்லியில் நடந்தது. பாராளுமன்ற  மைய மண்டபத்தில் நடந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: “ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சில மாவட்டங்களில் வளர்ச்சிக்கான அளவுகோல்கள் சிறப்பாக உள்ளன. இவற்றில் இருந்து நாம் கற்றுகொண்டு பலவீனமான மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும். ஆரோக்கியமான போட்டியும் கூட்டாட்சியும் தான் நாட்டின் பலம். பொது மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. வளர்ச்சிக்கான பணிகளில், மக்களையும் ஒருங்கிணைத்து அதிகாரிகள் செயல்பட்டால், அதன் முடிவுகள் சிறப்பாக அமையும்.

நம்மிடம் மனித ஆற்றல், அறிவாற்றல் மற்றும் வளங்கள் உள்ளது. நாம் மாற்றத்தை கொண்டு வர பாடுபட வேண்டும். சமூக நீதியே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்று மோடி  பேசினார்.

மருத்துவ உயர் கல்வியில் சமூகநீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் மோடி இப்படிப் பேசியிருப்பது  குறிப்பிடத்தக்கது.