சென்னை:
பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலர் டாக்டர் பீலா ராஜேஷ், கிராமப்புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் உணவுப்பொருட்கள், வாங்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
நியாய விலைக் கடையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் சென்றனா். அவர்களின் கைகள் கழுவுவதற்கு தேவையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இந்த சமூக விலகல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதுபோன்று பொதுமக்கள் அனைவரும் சமூக விலகைளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.