கடந்த இரு நாட்களாக சென்னையில் பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றுமுதல் சென்னை உள்பட பல பகுதிகளில், அரசின் நெறிமுறைகள் காணாமல் போய்விட்டது. மக்கள் எப்போதும்போல, பயணிக்கத் தொடங்கி விட்டனர். பேருந்து நடத்துனர்களும், அரசின் உத்தவை காதில் வாங்கிக்கொள்ளாமல், பேருந்து முழுவதும் பயணிகளை ஏற்றி வருகின்றனர்.
மாநகர பஸ்சில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகள் பயணித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில், அரசு உடனே தலையிட்டு, மேலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.