சென்னை

துவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வரும் 19 ஆ,ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி  தேர்தல் நடைபெறும் இடங்களில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.   ரூ.50000க்கு அதிகமான அளவில் பணம் மற்றும் பொருட்கள் ஆவணமின்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பல இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.    இந்த வாகன சோதனையில் இதுவரை பறக்கும் படையினர் ரூ.53.72 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் ரொக்கம் பணம் மட்டும் ரூ.40.40 லட்சம் ஆகும்.  மேலும் 15 மடிக்கணினிகள், 40 ஸ்மார்ட் போன்கள், 140 குத்து விளக்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..   இவை அனைத்தும் தமிழக அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.