டெல்லி: டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற இருந்த மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்கத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியவர், மாநிலம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 495 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தனியாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், டெங்கு பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை புதிய வகை A. Y.4.2 கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்தார்.