சென்னை:
ஆர்ட்ஸ் காலேஜுக்கு 2.75 லட்சம் பேர், பொறியியல் படிப்புக்கு 1.18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஜூலை 20ந்தேதி மாலை , அரசு கலை கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் உள்ள
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2.75 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளதாகவும்,
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.18 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் துணைவேந்தரை நியமனம் செய்வது முழுவதும் ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்பட்டது,
தகுதியானவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர், இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்று கூறினார்.
தகுதியானவர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர், இதில் மாநில அரசின் பங்கு எதுவும் இல்லை என்று கூறினார்.