ரஷ்யாவின் ‘பைக்கால் ஏரி’யில் வருடாந்திர பனி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது..
இந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 32 நாடுகளைச் சேர்ந்த மாரத்தான் வீரர்கள் பங்கேற்றனர்.
சைபீரியாவில் உள்ள பனியால் மூடப்பட்டுள்ள பைக்கால் ஏரி பரப்பின் மீது நடைபெற்ற போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்று ஓடினர்.
சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பனி மாரத்தான் பந்தய தூரத்தை, நடுங்க வைக்கும் குளிருக்கும் இடையில் போட்டியாளர்கள் ஓடியே கடந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசோடு, சூடான உணவு மற்றும் பானங்களும் கொடுத்து குளிரை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல் போல் உலகக்கோப்பை ஐஸ் மோட்டார் சைக்கிள் போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஐஸ் மோட்டார் சைக்கிள் போட்டியில் ரஷ்ய வீரர் முன்னணி பெற்றுள்ளார்.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் ரஷ்யா, ஆஸ்திரியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் ரஷ்ய வீரர் Dmitry Koltakov அபாரமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி முதல்பரிசை தட்டிச்சென்றார்.