புன்னகை அரசி சினேகா தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நடிகை . கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார்.
2009ல் வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிக்கும்போது பிரசன்னாவை காதலித்த சினேகா மூன்று ஆண்டுகள் கழித்து 2012 ல் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 2015ல் இவர்களுக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினர் .
இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்