டில்லி:

ரசியல் பிரவேசம் செய்துள்ள பிரியங்கா காந்தி,சமூக வலைதளமான டிவிட்டர் இணைய தளத்திலும் இணைந்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவை காண அவரது டிவிட்டர் கணக்கை தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் தலைவர் ராகுல்காந்தி, தனது சகோதரியான பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக கடந்த மாதம் 23ந்தேதி  நியமனம் செய்து அறிவித்தார்.

பிரியங்காவுக்கு, மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அடங்கி உள்ள உ.பி. மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதையடுத்து, காங்கிரஸ் தலைமைய கத்தில் பொறுப்பேற்ற பிரியங்கா, தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட ஏதுவாக டிவிட்டர் சமூக இணையதளத்தில், தனி கணக்கு தொடங்கி உள்ளார். இதில் அவரை பின்தொடரலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இனிமேல் பிரியங்கா காந்தியின் அதிரடி நடவடிக்கைகளை, அவரது டிவிட்டர் பதிவில் எதிர்பார்க்கலாம்…