‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் .

தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார்.

தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.