சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு கணிதத் தேர்வினால் ஏற்பட்ட கிளர்ச்சி
மத்திய உயர்நிலைகல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவிக்கத் தயாராக உள்ள நிலையில், மாணவர்களுக்கும் அரசுக்கும் இடையே கருத்து வேறுபாட்டினால் விவாதங்கள் அதிகரித்து வருகிறது.
10-ம் வகுப்பு தேர்வில் தோன்றிய அனைத்து மாணவர்களும் கணிதத் தாள் மிகவும் கடினமாகவும் நீளமாகவும் இருந்ததாக கூறினர்.
10 ம் வகுப்பு கணித தேர்வு பற்றிய மாணவர்களின் கருத்து:
சமீபத்திய அறிக்கைகளின் படி, காசியாபாத் பால் பாரதி பப்ளிக் ஸ்கூல் (BBPS) சேர்ந்த சாஹத் கன்னா என்ற மாணவர், “பரீட்சை கடுமையாகவும் நீளமாகவும் இருந்தது. என்னால் நேரத்தோடு தேர்வை எழுதி முடிக்க முடியவில்லை, நான் இரண்டு கேள்விகள் விட்டுவிட்டேன். டி பகுதி தான் வினாத்தாளில் மிகவும் கடினமான பகுதியாக இருந்தது. நான் என்சிஇஆர்டி யிலிருந்து கேள்விகள் எதிர்பார்த்தேன் ஆனால் எந்தவொரு கேள்வியும் புத்தகத்திலிருந்து வரவில்லை. கேள்விகள் கேட்கப்பட்ட விதம் கூட வித்தியாசமாகவும் கடினமாகவும் இருந்தது. பல கேள்விகள் தந்திரமாகவும் பயன்பாட்டின் அடிப்படையிலும் இருந்தன ” என்று கூறினார்.
வினாத்தாள் கடினமாக இருப்பதாக எண்ணிய மற்றொரு மாணவரான, ஸ்மிருதி பந்த், “வினாத்தாள் மிகவும் கடினமாகவும் தந்திரமாகவும் இருந்தது. பரீட்சைக்கான மூன்று மணி நேர கால அவகாசம் மிகவும் குறைவாக இருந்தது. என்னால் கேள்வி தாளை புரிந்து கொள்ள முடியவில்லை. தேர்வு முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன் ” என்றும் தெரிவித்தார்.
ஸ்மிருதி இரானியின் கருத்து:
இதற்கிடையில், மனிதவள மேம்பாடு அமைச்சர் ஸ்மிருதி இரானி, கணிதம் தேர்வுப் பிரச்சினைக் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறுகையில், “இப்பிரச்சினையை பாட நிபுணர்கள் குழுவிடம் சிபிஎஸ்இ முன்வைத்துள்ளது. கேள்வி தாள்கள் பாடத்திட்டம் மற்றும் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாதிரி கேள்வி தாள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இருந்தன என்று அந்த குழு முடிவு கூறியது . ”
மேலும், 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு பிரச்சினை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், 12 ஆம் வகுப்பு கேள்வி தாள்கள் பரீட்சைக்கு முன் வெளியாகியதாக தகவல்கள் வந்துள்ளன, ஆனால் அரசாங்கம் அந்த தகவல்களை மறுத்து அவை ‘ஆதாரமற்றது’ என்று கூறியுள்ளதாக இரானி தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு கணித தேர்வு பற்றிய மாணவர்களின் எதிர்வினை:
மார்ச் 14 திங்கட் கிழமை அன்று நடைப்பெற்ற கணித தேர்வுத் தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் உண்மை என்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கூறினாலும், ஆசிரியர்கள் உட்பட குழு அதிகாரிகள் இதனை மறுத்தனர்.
ஜார்க்கண்ட் சக்ரதர்பூர் மாணவர் ஒருவர் கேள்வி தாள் பற்றி விமர்சனங்களை கொடுத்த போது, “கேள்வி தாள், பரீட்சைக்கு முந்தைய வெளியான தாளை ஒத்து இருந்தது” என்றார். “பரீட்சைக்குப் பிறகு, சில மாணவர்கள் தங்கள் போன்களில் அதைப் போலவே ஒரு கேள்வி தாளைக் காட்டினர்.”
மேலும், ஊடகங்களின் ஆய்வறிக்கை அடிப்படையில், மற்ற மாணவர்கள் கசிந்தது காகித கேள்விகள் மிக உண்மையான காகித கேள்விகளுக்கு போன்ற இருந்தன மற்றும் அதே காட்சியில் எழுதப்பட்டன என்று கூறுகின்றனர்.
12 ஆம் வகுப்பு கணிதம் தேர்வுக்கு தோன்றிய மாணவர்களின் எதிர்வினையின் வீடியோ கீழே உள்ளது: