வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி நேற்று வாரணாசி சென்று தன்னை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தேடுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கங்கா ஆரத்தி வழிபாடுகளில் கலந்துகொள்ள சென்றார்.

பிரதமரின் கான்வாய் நெரிசலான சாலை வழியாக சென்றது அப்போது பிரதமர் மோடியின் குண்டு துளைக்காத கார் மீது செருப்பு வீசப்பட்டது.

பிரதமரின் பாதுகாப்பு மீறப்பட்ட இந்த செயலுக்கு காரணமான நபர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.