பிராடிஸ்லாவா: லிபரல் வழக்கறிஞர் மற்றும் அரசு விமர்சகர் சூஸானா கபுடோவா, ஸ்லோவேகியா நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மரோஸ் செஃப்கோவிக் என்பவரைவிட, மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவர் 58.4% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரோஸ், 41.6% வாக்குகளைப் பெற்றுள்ளார். இவர், ஆளுங்கட்சியால் ஆதரிக்கப்பட்டு சுயேட்சை வேட்பாளராக நின்றவர். இவர் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்.

மேலும், ஐரோப்பிய கமிஷனின் துணைத் தலைவராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தவர் மரோஸ்.

தற்போது சூஸானா பெற்றுள்ள வெற்றியானது, ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு மனோநிலை, அரசியல்வாதிகளுக்கு, தற்போதைய நிலையில், அக்கண்டத்தில் தேர்தல் வெற்றியை பெற்றுத் தருகிறது என்ற கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது.

அதேசமயம், ஆளுங்கட்சியின் மீது, மக்களுக்கிருந்த கட்டுக்கடங்காத அதிருப்தியே இவரின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி