மதுரை:
அடிமை, டயர் நக்கி அதிமுக அரசு என்று அதிமுக அரசை கடுமையாக தாக்கியுள்ள மதுரை திமுக எம்எல்ஏ பிடிஆர் எனப்படும் பி.தியாகராஜன்.
மதுரையில் உள்ள 130 ஆண்டுக்கால பாரம்பரியம் மிக்க ஏ.வி பாலம் சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் பூசும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. பாலத்துக்குக் காவி பெயின்ட் அடிக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுக எம்எல்ஏ பி.டி.ஆர். தியாகராஜன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
ஆனால், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பணியாளரோ,பாலத்துக்குப் பொருந்தும் வகை யில் சில வண்ணங்களைத் தேர்வு செய்து பார்த்ததில் தற்போது பாலத்துல அடிச்சிருக்கிற பொன்னிற மஞ்சள் வண்ணம்தான். அடுத்த மாசம் இந்த மஞ்சள் வண்ணத்துல பாலம் சிறப்பா, புதுசுபோலத் தெரியும். மத்தபடி, கலர் செலக்ஷனுக்காக அடிச்ச ஆரஞ்சு நிறத்தைத்தான் காவினு மக்கள் தவறா புரிஞ்சுக்கிட்டாங்க” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன் பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது? அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை ‘அடிமை, டயர் நக்கி’ என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா? என்று மதுரை திமுக எம்எல்ஏ கடுமையாக சாடியுள்ளார்.