கொழும்பு:
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே லகிரு திரிமன்னே கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்து வரும் நிலையில், லகிரு குமார கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இதனால், மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணியில் லகிரு குமார வுக்கு பதிலாக, சுரங்க லக்மால் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel