நியூஸ்பாண்ட்:
“அத்தனைக்கும் ஆசைப்படுவர்” அரசுக்கு சொந்தமான வனங்களை சட்டத்துக்குப் புறம்பாக வளைத்துப்போட்டிருப்பதும், இதனால் காட்டு யானைகள் வழிதவறி  தவிப்பதும் பழைய செய்தி.
ஏதேதோ சொல்லி அதீத கட்டணம் வாங்குவதும், அது குறித்து வெளிநாட்டு பெண்மணி புகார் செய்ததும் கூட பலருக்குத் தெரிந்ததுதான்.

நியூஸ்பாண்ட்
நியூஸ்பாண்ட்

அதோடு, சிஷ்யைகள் என்ற பெயரில் இளம்பெண்களை மொட்டையடித்து சந்நியாசிகளாக்குவதும், தனது பெண்ணுக்கு மட்டும் படாடோபமாக திருமணம் செய்துவைத்ததும்கூட அனைவரும் அறிந்ததே.
இதில் பலருக்கும் புரியாத புதிர்…
இத்தனை புகார்கள் இருந்தும் அசைக்க முடியாத வெள்ளி மலையைாய் ஜக்குரு இருக்கிறாரே..  என்பதுதான்!
பெரிய பெரிய அரசியல் வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள்,  உயர் அதிகாரிகள் என்று பலரும் இந்த சசிக்க முடியாத இந்த “சாமி”யின் பாததத்தில் விழுந்து கிடப்பதுதான், அவரது பலம்.
அதே நேரம் அந்த வி.ஐ.பி.க்கள் எல்லாம், சாதாரண மக்களைப்போல  அப்பாவித்தனமாக சத்குருவிடம் சரணடைவதில்லை… பின்னணியில் பெரும் பணம் புழங்குகிறது!
பல பெரும் பண முதலைகள், தங்களது கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் யுக்திகளில் ஒன்றாக அந்த ஆசிரமத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கு சத்குருவுக்கு தனி கமிசன் உண்டு.
அடுத்து.. பெரிய பெரிய பண பேரங்கள் இங்கு முடிவாகின்றன.  பல தொழில் வி.ஐ.பிக்கள், அதிகார வர்க்கத்தினர் சாமிக்கு அறிமுகம் என்பதால்.. பேரத் தரகராக இருந்து வர்த்தகங்களை முடித்துத்தருகிறார்.
மட்டை பந்து தொடர்பான பெரும் பிரச்சினை, ஓரளவு சுமுகமான முடிவுக்கு வந்தது அனைவருக்கும் தெரியும் இதன் பின்னணியில் இருந்தது சாமிகள்தானாம்.
மீடியாவும் இவர் கையில் என்கிறார்கள்!
“சூரிய நாளேட்டின்  உரிமையாளராக இருந்தவர் முருகன் பெயர் கொண்டவர். அவருக்கு தியானத்தில் ஆசை வர, இந்த சத்குருவிடம் கொண்டுபோய் இழுத்துவிட்டார்கள்.  முருகரின் பணபலத்தை அறிந்த சத்குரு, அவரை வசியம் செய்துவிட்டார்.
இவர் வேறு சாமி(!)
இவர் வேறு சாமி(!)

தனது நாளேட்டின் நிர்வாகத்தை சரிவர கவனிக்காமல், சாமியே சரணம் என்று இருக்க ஆரம்பித்தார். சாமியின் மலையிலேயே ஒரு குடிலை வாங்கி (அங்கு குடில் விற்பனையும் உண்டு. ஒரு குடிலின் விலை அப்போதே 50 லட்சத்துக்கு மேல்!) அங்கேயே பல நாட்கள் தங்க ஆரம்பித்துவிட்டார்.
இங்கே நாளேட்டு நிர்வாகத்தில் ஏகக்குளறுபடிகள் ஆக ஆரம்பித்தன. இந்த சூழலில் “சாமி” தனது சித்துவேலையைக் காட்டினார்.
சூரிய தொ.கா. வட்டாரத்தில் தனக்குள்ள  தொடர்பை பயன்படுத்தி, “உங்களது பெயருக்கு ஏற்படி அந்த நாளேட்டின் பெயரும் இருக்கிறதே. விலைக்கு வாங்கலாமே” என்று ஆரம்ப விதை போட்டது இவர்தான்.
அது மட்டுமல்ல…  இந்த பேரத்தை  முடித்துக்கொடுத்தவரும் இவர்தான்.
இதே போல சமீபத்தில் ஒரு பேரத்தை முடித்திருக்கிறார்.   ஒரு சேனலை கைமாற்றிவிட்டிருக்கிறார்.    இருதரப்பும் ஆளுக்கொரு தொகையை சொல்ல..  கண்களை மூடி தியானித்த சக்குரு..  அறுபது (கோடிக்கு) முடித்துக்கொள்ளுங்கள் என்று தெய்வ வாக்காக சொல்ல.. இரு தரப்பும் ஒப்புகெகாண்டதாம்…!
இருபக்கமும் கமிஷன் வாங்கிவிட்டார்!” என்கிறார்கள்.
லோக்கல் பூசாரிகள், “கருப்பன்” கேட்கிறான் என்று கேட்டு வாங்குவார்கள். இந்த கார்பரேட் சாமியார், தனது டிரஸ்டுக்கு என்று சொல்லி கேட்டு வாங்கிவிடுகிறாராம்.
அத்தனைக்கும் ஆசைப்படுபவர் என்றால் சும்மாவா?