தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகமானார் .

தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ஹிப்ஹாப் தமிழா, இப்படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என பெயரிட்டுள்ளர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகிறது.

இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை ‘திங்க் மியூசிக்’, நிறுவனம் பெற்றுள்ளதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான சிவகுமாரின் சபதம் பாடல்களும் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் படத்திலிருந்து மற்றொரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]