உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சிவகுமாருக்கு கொரோனா வந்து விட்டதாகவும், இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இணையத்தில் வதந்திகள் பரவியது.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், தன் வீட்டிலிருந்து ஒரு செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சிவகுமார். மேலும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தினசரி யோகா, நல்ல உணவு முறை என இருக்கும் சிவகுமாரை கொரோனா நெருங்க இயலாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

[youtube-feed feed=1]