தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது.

எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , திரையுலகினர் மற்றும் அவர் ரசிங்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் :

“இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்…இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்” என பதிவிட்டுள்ளார் .