தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். தனது எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ’கனா’ படத்தில் இடம்பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை மகளுடன் இணைந்து பாடியிருப்பார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தனது மகனுக்கு குகன் தாஸ் எனப் பெயரிட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். “எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.. உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

18 வருடங்களுக்குப் பிறகு அப்பாவே மகனாய் பிறந்திருக்கிறார் எனத் தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது அவரது பெயரான ‘தாஸ்’ என்பதை மகனுக்கு வைத்துள்ளார்.